Monday, 5 March 2018

மேலதானியத்தில் கோடை பயிற்சி முகாம்...

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளை சார்பாக மே 20 முதல் 30 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோ. ஜமீர் யூசப் மற்றும் யாசர் மற்றும் இஷாக் பயிற்சியளித்தார்கள்.எல்லாம் வல்ல இறைவனின் அருளால் வகுப்புகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இது தான் இஸ்லாம் மேலத்தானியம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

photo0048 (1)


புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளையில் 06.5.13 அன்று “இது தான்
இஸ்லாம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. யூசுப் ஜமீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

Sunday, 4 March 2018

மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த பெண்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மேலத்தானியம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட மேலத்தானியம் முகம்மதுசித்திக் என்பவரது மனைவி ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் என்பவர் 0.30.0ஏர்ஸ் (74 சென்ட்நிலத்திற்குரிய ஆவணத்தை மாவட்ட கலெக்டர் சு.கணேஷிடம் வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவதுபுதுக்கோட்டை சுகாதார மாவட்டம்பொன்னமராவதி வட்டாரம்மேலத்தானியம் கிராமத்தில் 28.01.2017 அன்று முதல் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறதுஇந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஊராட்சி ஒன்றிய சமுதாயகூட கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது இவற்றிற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தினசரி 90 நபர்களுக்கு மேல் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகிறார்கள்இதில் மருத்துவ அலுவலர்செவிலியர்மருந்தாளுனர்மருத்துவமனை பணியாளர் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

மேலத்தானியம் ஊராட்சி

மேலத்தானியம் ஊராட்சி (Melathaniyam Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில்உள்ள பொன்னமராவதி வட்டாரத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2412 ஆகும். இவர்களில் பெண்கள் 1274 பேரும் ஆண்கள் 1138 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

MELATHANIYAM OVERVIEW

Melathaniyam is a Village in Ponnamaravati Block in Pudukkottai District of Tamil Nadu State, India. It is located 30 KM towards west from District head quarters Pudukkottai. 10 KM from Ponnamaravati. 404 KM from State capital Chennai 

Melathaniyam Pin code is 622002 and postal head office is Tirugokarnam . 

Pudukkottai ,Karaikudi , Tiruchirappalli,THANJAVUR ,MADURAI are the near by Cities to Melathaniyam.

This Place is in the border of the Pudukkottai District and Sivaganga District. Sivaganga District S. Pudur is west towards this place .

Demographics of Melathaniyam

Tamil is the Local Language here.