Sunday, 4 March 2018

மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த பெண்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மேலத்தானியம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட மேலத்தானியம் முகம்மதுசித்திக் என்பவரது மனைவி ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் என்பவர் 0.30.0ஏர்ஸ் (74 சென்ட்நிலத்திற்குரிய ஆவணத்தை மாவட்ட கலெக்டர் சு.கணேஷிடம் வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவதுபுதுக்கோட்டை சுகாதார மாவட்டம்பொன்னமராவதி வட்டாரம்மேலத்தானியம் கிராமத்தில் 28.01.2017 அன்று முதல் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறதுஇந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஊராட்சி ஒன்றிய சமுதாயகூட கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது இவற்றிற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தினசரி 90 நபர்களுக்கு மேல் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகிறார்கள்இதில் மருத்துவ அலுவலர்செவிலியர்மருந்தாளுனர்மருத்துவமனை பணியாளர் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

 இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு போதுமான இடம் கிடைக்காத சூழ்நிலையில் மேலத்தானியம் கிராமத்தை சேர்ந்த முகம்மதுசித்திக் என்பவரது மனைவி ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் என்பவர்0.30.0ஏர்ஸ் (74 சென்ட்நிலத்தினை நன்கொடையாக அரசுக்கு வழங்கியுள்ளார்கள்இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும்இந்த நிலத்தை வழங்கிய ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் போன்று தமிழக அரசின் இத்தகைய திட்டங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவ முன்வர வேண்டும்மேலும் விரைவில் இந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமான கட்டடம் எழிலுற கட்டப்படவுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ்தெரிவித்தார்இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.பரணிதரன்முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திலகவதிமுருகேசன்ஜமாத் பொருளாளர் அபிபுல்லாமேலத்தானியம் கிராமத்தார்கள் மலைச்சாமிவெள்ளைச்சாமி மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்